இந்தியாவில் செக்மெண்ட் பர்ஸ்ட் 8000mAh பேட்டரி கொண்ட மாடலாக ரியல்மி பி4ஆர் 5ஜி (Realme P4R 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த சாதனம் பேட்டரி மட்டுமல்லாமல் செக்மெண்ட் ஃபாஸ்டஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொடுக்கிறது. இதனால், இப்போதே ஒட்டுமொத்தமாகவே கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.
முன்னதாக, 10001mAh பேட்டரியுடன் வெளியான ரியல்மி பி4 பவர் 5ஜி (realme P4 Power 5G) ஸ்மார்ட்போனுக்கு பிறகு பெரிய பேட்டரி கொண்ட மாடல்களை களமிறக்குவதில் ரியல்மி இந்தியா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதில் புதிய மாடலாக ரியல்மி பி4ஆர் 5ஜி (Realme P4R 5G) ஸ்மார்ட்போனை வருகிற ஜூன் 10ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இருப்பினும், இந்த அறிமுகத்துக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட முழு பீச்சர்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டன. குறிப்பாக பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், சிப்செட் மட்டுமல்லாமல் கலர் மற்றும் டிசைன் விவரங்களும் ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் உறுதியாகி இருக்கின்றன. இதனிடையே, இதன் பட்ஜெட் விவரங்களும் மார்கெட்டில் கசிந்து, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது. எனவே, இதில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான தொழில்நுட்ப அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த முழுமையான விபரங்களை கீழே விரிவாகப் பார்க்கலாம்.
Realme P4R 5G Specifications
ரியல்மி பி4ஆர் 5ஜி அம்சங்கள்: 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரியை இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், இது சிங்கிள் சார்ஜில் 3 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். இந்த செக்மெண்ட்டில் 5300எம்எம் ஏர்ப்ளோவ் விசி கூலிங், (AirFlow VC Cooling) கொண்ட மாடலாகவும் இது இருக்கிறது.
இந்த பெரிய பேட்டரி இருந்தும் 8.8 எம்எம் தடிமன் மட்டுமே கொடுத்துள்ளது. மேலும், 7 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் கொடுக்கப்படுகிறது. இதனுடன் 4 லேயர் பேட்டரி பாதுகாப்பு கிடைக்கிறது. ஆகவே, ஹை மற்றும் லோவ் டெம்ப்ரேச்சர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. பிளாட் கம்பிரஷன் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஓவர் சார்ஜிங் புரொடெக்சன் கிடைக்கிறது.
Realme P4R 5G Features
ரியல்மி பி4ஆர் 5ஜி சிறப்பம்சங்கள்: மேலும் இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. இதனுடன் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (Octa Core MediaTek Dimensity 6300 5G) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. 48 மாதங்களுக்கு ப்ளூயன்சி கேரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
இப்போது 14 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடலாக ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மேலும், மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் (எம்ஐஎல்-எஸ்டிடி 810எச்) கொடுக்கப்பட்டு உள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 50 எம்பி டூயல் ஏஐ கேமரா (50MP Dual AI Camera) கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுவும் படியுங்கள்: Government Saving Schemes 2026: எஃப்டியை விட அதிக லாபம் தரும் 3 மாஸ் அரசு சேமிப்புத் திட்டங்கள்!
Realme P4R 5G Battery
ரியல்மி பி4ஆர் 5ஜி பேட்டரி : அதேபோல் ஏஐ பல்ஸ் லைட் (AI Pluse Light) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow), ஏஐ எரைசர் (AI Eraser) கிடைக்கிறது. சில்வர் கிளார் (Silver Glare), (Titanium Glare) டைட்டானியம் கிளார், மற்றும் லாவெண்டர் கிளார், (Lavender Glare) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது.
இதுபோக "அதிக கேமிங் பிரியர்களுக்கு" பயன்படும்படி பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இதனுடன் ஒன் டேப் கூலிங் (One Tap Cooling) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 1200 நிட்ஸ் அல்ட்ரா சன்லைட் டிஸ்பிளே வசதியும் மிகக் கச்சிதமாகக் கிடைக்கிறது.
இதுவும் படியுங்கள்: How to Cancel UPI Auto Pay: கூகுள் பே, போன்பே ஆப்ஸில் பணம் கட் ஆவதை தடுப்பது எப்படி?
Realme P4R 5G Price India
ரியல்மி பி4ஆர் 5ஜி விலை : இந்த பிரம்மாண்டமான 5ஜி ஸ்மார்ட்போன் அனைத்து லேட்டஸ்ட் தொழில்நுட்ப பீச்சர்களுடன் இந்திய சந்தையில் ரூ.20,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இதன் அசல் விற்பனை சலுகைகள் ஜூன் 10 அறிமுகத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.
எனவே, நீங்கள் நீண்ட நேரம் உழைக்கக்கூடிய மிகச்சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட ஒரு மாஸ் 5ஜி போனை பட்ஜெட் விலையில் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்த புதிய Realme P4R 5G மாடல் உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.


