realme P4R 5G: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி பேக்கப் தரும் மொபைல்களை அறிமுகம் செய்வதில் ரியல்மி நிறுவனம் எப்போதுமே முன்னணியில் இருக்கும். அந்த வகையில், தனது புகழ்பெற்ற 'P' சீரிஸ் வரிசையில் முதல்முறையாக 'R' என்ற புதிய எண்டூரன்ஸ் மாடலான ரியல்மி பி4ஆர் 5ஜி (realme P4R 5G) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் கன்பார்மாக அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போனின் லான்ச் தேதியுடன் சேர்த்து, இதன் அதிகாரப்பூர்வ அம்சங்கள் மற்றும் டிசைன் விபரங்களை ரியல்மி நிறுவனம் தனது பிளிப்கார்ட் (Flipkart) மைக்ரோசைட் பக்கத்தில் 100% உறுதி செய்துள்ளது. நுகர்வோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மாடலின் கன்பார்ம் ஆன முழு விபரங்களைத் தொடர்ந்து கீழே விரிவாகப் பார்க்கலாம்.
realme P4R 5G Specifications & Features
ரியல்மி பி4ஆர் 5ஜி அம்சங்கள்: இந்த புதிய ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) பிராசஸர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் பட்ஜெட் விலையில் சிறந்த வேகம் மற்றும் அசாத்திய செயல்திறனை தங்கு தடையின்றி வழங்கும்.
மேலும், இந்த போனில் 48 மாதங்கள் வரை போன் ஹேங் ஆகாமல் இருக்க ஃபுளூயன்சி கேரண்டி (48-Month Fluency Guarantee) சப்போர்ட் உள்ளது. அதுமட்டுமின்றி, ஹெவி கேமிங்கின் போது போன் சூடாவதைத் தடுக்க இதில் 5300mm² ஏர்ஃபுளோ விசி கூலிங் சிஸ்டம் (5300mm² AirFlow VC Cooling System) வசதியும் கன்பார்ம் செய்யப்பட்டுள்ளது.
இதுவும் படியுங்கள்: அந்நியச் செலாவணியை பாதுகாக்க ரூ.1.15 லட்சம் கோடி தங்கம் விற்கப்பட்டதா? - Reserve Bank விளக்கம்
realme P4R 5G Camera
ரியல்மி பி4ஆர் 5ஜி கேமரா : பின்புறத்தில் 50எம்பி ஏஐ பிரைமரி கேமரா (50MP AI Primary Camera) அடங்கிய டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், இதன் பின்புற பேனலில் 9 கலர்கள் மற்றும் 5 ஸ்பீடு செட்டிங்ஸ் கொண்ட கஸ்டமைசபிள் ஏஐ பல்ஸ் லைட் (Customizable AI Pulse Light) ரிங் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கேமிங் மற்றும் மியூசிக் பிளேபேக் நோட்டிபிகேஷன்களைத் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, புகைப்படங்களை எடிட் செய்ய ஏஐ எரேஸர் 2.0 (AI Eraser 2.0) மற்றும் ஏஐ போர்ட்ரெய்ட் க்ளோ (AI Portrait Glow) போன்ற அதிநவீன ஏஐ கேமரா அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. கேமரா செட்டப்பில் ரியல்மி நிறுவனம் வெச்சி செஞ்சிட்டாங்க.
realme P4R 5G Display
ரியல்மி பி4ஆர் 5ஜி டிஸ்ப்ளே விபரங்கள்: 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் 1200 நிட்ஸ் மேக்ஸ் பிரைட்னஸ் கொண்ட அல்ட்ரா சன்லைட் டிஸ்ப்ளே (1200nits Ultra Sunlight Display) இந்த போனில் கன்பார்ம் செய்யப்பட்டுள்ளது. பெரிய திரை என்பதால் வீடியோக்கள் மற்றும் கேம்கள் பார்க்கப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மெமரி அளவைப் பொறுத்தவரை, 256ஜிபி அதிவேக இன்டெர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 14ஜிபி வரை டைனமிக் ரேம் (14GB Dynamic RAM) சப்போர்ட் இதில் உள்ளது. இதனால் மல்டி-டாஸ்கிங் மற்றும் கேமிங் செய்யும்போது மொபைல் மிகவும் ஸ்மூத்தாக இயங்கும்.
இதுவும் படியுங்கள்: Xiaomi 17T Price & India Launch Date கன்பார்ம்: முழு விபரம் இதோ!
realme P4R 5G Battery
ரியல்மி பி4ஆர் 5ஜி பேட்டரி விபரங்கள்: இந்த போனின் மிகப்பெரிய சிறப்பம்சமே, இதில் சிலிகான்-கார்பன் தொழில்நுட்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள 8000mAh டைட்டன் பேட்டரி (8000mAh Titan Battery) தான். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 3 நாட்களுக்குத் தேவையான பேட்டரி பேக்கப்பை தாராளமாக வழங்கும்.
எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலையே இருக்காது. மேலும், இந்த பிரம்மாண்ட பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (45W Fast Charging) மற்றும் பிற சாதனங்களை சார்ஜ் செய்ய ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
realme P4R 5G Price
ரியல்மி பி4ஆர் 5ஜி விலை விபரங்கள்: அனைத்து அதிரடி அம்சங்களுடன் வரப்போகும் இந்த புதிய ரியல்மி 5ஜி போன் பட்ஜெட் விலையில் வெளியாவது உறுதியாகியுள்ளது. தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளம் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தியாவில் இதன் ஆரம்ப விலை தோராயமாக ₹15,000 முதல் ₹20,000 ரூபாய் பட்ஜெட்டில் (Expected Price Between Rs.15,000 - Rs.20,000) அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக டாப் வெப்சைட்டுகள் தெரிவிக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில் நீண்ட பேட்டரி லைஃப் எதிர்பார்க்கும் பயனர்கள் வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்!
realme P4R 5G India Launch Date
ரியல்மி பி4ஆர் 5ஜி அறிமுக தேதி: ரியல்மி நிறுவனம் தனது பிளிப்கார்ட் மைக்ரோசைட் பக்கத்தில் இந்த போனின் லான்ச் தேதியை 100% உறுதி செய்துள்ளது. அதன்படி, இந்த புதிய ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 10-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவுள்ளது.