Xiaomi Pad 8 Price Hike விபரங்களின்படி, இந்தியாவில் பட்ஜெட் விலையில் (Budget Price) சிறந்த அம்சங்களை வழங்கி வந்த சியோமி பேட் 8 மாடலின் விலையைத் தற்போது சியோமி நிறுவனம் (Xiaomi India) இந்திய சந்தையில் அதிரடியாக உயர்த்தியுள்ளது. உலகளவில் நிலவும் மெமரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாக, ஏற்கனவே அதன் பல ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ள நிலையில் தற்போது டேப்லெட் மாடல்களின் விலைகளையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிறுவனம் அதன் லேட்டஸ்ட் மாடல்களில் ஒன்றான சியோமி பேட் 8 விலையை மிகவும் அமைதியான முறையில் உயர்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடலின் அனைத்து ரேம் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களிலும் (Storage Variants) ரூ.2,000 வரை திடீர் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Xiaomi Pad 8 Price Hike: சியோமி பேட் 8 பழைய விலை மற்றும் புதிய விலை மாற்றங்கள் (Price Comparison)
சமீபத்திய விலை மாற்றத்தின் விளைவாக, சியோமி பேட் 8 மாடலின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (Standard Variant) ஆனது ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது அதன் அறிமுக விலையான ரூ.33,999 இல் இருந்து ரூ.2,000 அதிகமாகும்.
ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலையானது, அதன் அறிமுக விலையான ரூ.36,999 இல் இருந்து தற்போது ரூ.38,999 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல சியோமி போகஸ் பென் ப்ரோ (Xiaomi Focus Pen Pro) உடன் வரும் இந்த மாடலின் விலை, முன்பு ரூ.41,999 ஆக இருந்தது, இப்போது ரூ.43,999 ஆக உள்ளது.
மேலும் இந்த மாடலின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நானோ டெக்ஸ்சர் டிஸ்பிளே வேரியண்ட் (Nano Texture Display) அதன் அறிமுக விலையான ரூ.38,999 இல் இருந்து ரூ.40,999 ஆக உயர்ந்துள்ளது. சியோமி போகஸ் பென் ப்ரோ உடன் வரும் நானோ டெக்ஸ்சர் டிஸ்பிளே மாடல், முன்பு ரூ.43,999 ஆக இருந்தது, இப்போது ரூ.45,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த திருத்தப்பட்ட புதிய Xiaomi Pad 8 Price Hike India விபரங்கள் தற்போது சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Official Website) பிரதிபலிக்கின்றன. அதிகரித்து வரும் உதிரிபாகங்களின் விலை மற்றும் உலகளாவிய சிப் பற்றாக்குறை (Chip Shortage) தான் இந்த விலை மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம். இப்போதைக்கு இது சரி ஆகாது என்பதால், புதிய சாதனம் வாங்க திட்டமிட்டு உள்ளவர்கள், இன்னும் விலை உயர்வதற்குள் உடனடியாக வாங்குவது நல்லது.
இதுவும் படியுங்கள்: Government Saving Schemes 2026: எஃப்டியை விட அதிக லாபம் தரும் 3 மாஸ் அரசு சேமிப்புத் திட்டங்கள்!
Xiaomi Pad 8 Screen Specs:
திரை அமைப்பைப் பொறுத்தவரை இது 11.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை (LCD Display) கொண்டுள்ளது. மேலும் இதன் திரையில் 3200 x 2136 பிக்சல்ஸ், 144ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate), 360ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (Touch sampling rate) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இதனுடன் 345 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் (Peak Brightness), எச்டிஆர் 10 (HDR10) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவுகளும் உள்ளன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) சார்ந்த புதிய ஹைப்பர் ஓஎஸ் 3.0 (HyperOS 3.0) மூலம் இந்த மாடல் மிகச் சிறப்பாக இயங்குகிறது.
Processor and Storage Speed:
செயல்திறனைப் பொறுத்தவரை இது குவால்காமின் அதிவேக ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் (LPDDR5x RAM) மற்றும் 12ஜிபி ரேம் வெர்ஷன்களை, 128ஜிபி மற்றும் 256ஜிபி அதிவேக ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் (UFS 4.1 Storage) கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இதன் பேக் பேனலில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13எம்பி ப்ரைமரி கேமரா (Rear Camera) மற்றும் முன்பக்கத்தில் வீடியோ கால்களுக்காக (Video Calls) 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு கச்சிதமாக உள்ளது.
Xiaomi Pad 8 Battery Life:
சக்திவாய்ந்த 9200mAh பேட்டரி (Battery Capacity) உடன் இந்த மாடல் வெளியாகி உள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் (Fast Charging) மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் இதில் உள்ளன.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை (Connectivity Options) பொறுத்தவரை இது வைஃபை 6, புளூடூத் வி6.0, ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. இது 4-மைக் அமைப்புடன் இணைக்கப்பட்ட டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட குவாட் ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.
இந்த டேப்லெட் கீபோர்ட் மற்றும் ஸ்டைலஸையும் (Keyboard and Stylus Support) ஆதரிக்கிறது. முக்கியமாக புதிய சியோமி பேட் 8 ஆனது பழைய மாடல்களின் போகஸ் பென் மற்றும் கீபோர்ட் உடனான இணக்கத்தன்மையை பராமரிக்கிறது. ஆக, இவைகளை ஏற்கனவே கொண்டுள்ள பயனர்கள் இந்த புதிய Xiaomi Pad 8 Price Hike India அறிவிப்புக்கு பிறகும் அதை புதிய மாடலில் தொடர்ந்து தடையின்றி பயன்படுத்தலாம்.

