Jio SIM பயனர்களுக்கு ஜாக்பாட்.. மாதம் ரூ.103 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ ரூ.1234 ரீசார்ஜ் திட்டம் மூலம் 336 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 165GB டேட்டா கிடைக்கிறது. முழு விவரங்கள் இதோ!

Jio Rs 1234 Prepaid Plan 336 Days Validity Tamil

Jio Rs 1234 Plan: இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத மலிவு விலையில் அசத்தலான வருடாந்திர திட்டங்களை வழங்கி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம்.

குறிப்பாக மாதம் வெறும் ரூ.103 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி (336 Days Validity), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை களமிறக்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வளவு மலிவான விலையில் கிடைக்கும் இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. ஜியோ 4ஜி பீச்சர் போன் மற்றும் ஜியோ பாரத் போன் (Jio Bharat Phone) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த பிளான் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அதிரடி திட்டத்தின் முழு விவரங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: ரூ.8,000 பட்ஜெட்டில் புதிய Lava போன்.. மாஸ் காட்டும் இந்திய பிராண்ட்!

Jio Rs 1234 Plan Details

ஜியோ ரூ.1234 திட்ட விவரங்கள்: இந்த வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மொத்தம் 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது 28 நாட்கள் கொண்ட 12 சுழற்சிகளாக இந்த முழு வேலிடிட்டி நன்மையும் பயனர்களுக்குக் கிடைக்கிறது.

இதன் மூலம் ஒரு மாதத்திற்கு ஏற்படும் சராசரி செலவு வெறும் ரூ.103 மட்டுமே ஆகும். இந்த வேலிடிட்டி காலம் முழுவதும் பயனர்கள் எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி வரம்பற்ற முறையில் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.

டேட்டா நன்மைகளைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 0.5GB அதிவேக 4ஜி டேட்டா வீதம் 336 நாட்களுக்கு மொத்தமாக 165GB டேட்டா (165GB Data) கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு 64Kbps வேகத்தில் தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்தலாம். இதனுடன் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோசாவன் (JioSaavn), ஜியோடிவி (JioTV) போன்ற செயலிகளுக்கான இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: 15000mAh பேட்டரியுடன் iQOO X Concept.. வேற லெவல் சிறப்பம்சங்கள்!

Jio Bharat Phone Prepaid Plans and Data Vouchers

Jio Phone Data Booster Plans

ஜியோபோன் கூடுதல் டேட்டா திட்டங்கள்: ஜியோ 4ஜி பீச்சர் போன்களில் யூடியூப், ஜியோ சினிமா போன்ற ஓடிடி ஆப்களைப் பயன்படுத்தும்போது தினசரி டேட்டா போதாது என்று நினைப்பவர்களுக்காக ரூ.122 மற்றும் ரூ.182 விலையில் பிரத்யேக டேட்டா வவுச்சர்கள் (Data Vouchers) கிடைக்கின்றன.

இதில் ஜியோ ரூ.122 திட்டம் (Jio Rs 122 Plan) ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1GB கூடுதல் டேட்டா கிடைக்கும். அதேபோல் ஜியோ ரூ.182 திட்டம் (Jio Rs 182 Plan) தேர்வு செய்தால் 28 நாட்களுக்கு நாளொன்றுக்கு 2GB கூடுதல் டேட்டா வசதி தரப்படும். இந்த ஆட்-ஆன் திட்டங்களைப் பெற முதன்மை திட்டம் செயல்பாட்டில் (Active Plan) இருக்க வேண்டும்.

Jio Rs 123 Plan Details

ஜியோ ரூ.123 திட்ட விவரங்கள்: ஜியோ 4ஜி பீச்சர் போன்களுக்கான ஆரம்ப விலை திட்டமாக இந்த ரூ.123 பிளான் இருக்கிறது. சொல்லப்போனால் ஜியோவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (Unlimited Calls) வசதியுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு 0.5GB டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன.

குறைந்த செலவில் சிம் கார்டை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். இது போன்ற சுடச்சுட புதிய டெலிகாம் மற்றும் ரீசார்ஜ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டெக் வாய்ஸ் தமிழ் (Tech Voice Tamil) தளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.


About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக