Lava Bold N4 Lite: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் சிறந்த போன்களை வழங்கி வரும் லாவா நிறுவனம், தனது போல்ட் சீரிஸில் அடுத்த மாடலை அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. மலிவு விலையில் அதிக நீடித்துழைக்கும் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் வரவுள்ளது.
குறிப்பாக Lava Bold N4 Lite (லாவா போல்ட் என்4 லைட்) என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விவரங்கள் தற்போது அமேசான் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. இந்த புதிய போனில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
Lava Bold N4 Lite Launch Date
லாவா போல்ட் என்4 லைட் அறிமுக தேதி: அமேசான் இந்தியாவில் நேரலையாகியுள்ள பிரத்யேக பக்கத்தின்படி, இந்த புதிய மாடல் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவுள்ளது.
அறிமுகத்திற்குப் பிறகு இந்த போன் அமேசான் தளம் வழியாக நேரடியாக விற்பனைக்கு வரும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக இலவச டோர்ஸ்டெப் சேவை (Free Doorstep Service) வசதியும் இந்த போனுக்கு வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: 15000mAh பேட்டரியுடன் iQOO X Concept.. வேற லெவல் சிறப்பம்சங்கள்!
Lava Bold N4 Lite Specifications
லாவா போல்ட் என்4 லைட் அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமே இதன் ராணுவத் தரப் பாதுகாப்பு வசதிதான். எதிர்பாராத விதமாக கீழே விழுந்தாலும் சேதமடையாமல் இருக்க இதில் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மிலிட்டரி கிரேடு ரேட்டிங் (MIL-STD-810H Military-grade Rating) கொடுக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பைப் பொறுத்தவரை தட்டையான ரியர் பேனல் (Flat Rear Panel), சதுர வடிவ கேமரா மாட்யூல் மற்றும் கோல்டன் ஃபினிஷ் கொண்ட பிரேம் அமைப்பு இதில் இடம்பெற்றுள்ளது.
போனின் அடிப்பகுதியில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: டிஸ்பிளேவே கிடையாது! Google-ன் புதுவிதமான Fitbit Air பேண்ட்!
Lava Bold N4 Lite Price
லாவா போல்ட் என்4 லைட் விலை விவரங்கள்: கடந்த ஏப்ரல் மாதம் ரூ.7,399 ஆரம்ப விலையில் வெளியான லாவா போல்ட் என்2 லைட் போனின் அடுத்த தலைமுறை மாடலாக இது வெளிவருகிறது.
முந்தைய மாடலில் 6.75-இன்ச் எச்டி+ 90Hz டிஸ்பிளே (6.75-inch HD+ 90Hz Display), 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டிருந்தது. எனவே புதிய மாடலும் தோராயமாக ரூ.7,500 முதல் ரூ.8,500 பட்ஜெட் விலைக்குள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற சுடச்சுட புதிய டெக் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டெக் வாய்ஸ் தமிழ் (Tech Voice Tamil) தளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.
