புதிய iPhone 18 Pro (ஐபோன் 18 ப்ரோ) மாடலின் வெளித்தோற்ற அமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், முந்தைய ஐபோன் 17 ப்ரோ மாடலை போலவே அச்சு அசலாக இருக்கும் என்றும் லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் பேசப்பட்டு வரும் இந்த புதிய லீக் விவகாரத்தின் முழு விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
iPhone 18 Pro Specifications
ஐபோன் 18 ப்ரோ அம்சங்கள்: ப்ளூம்பெர்க் நிருபர் மார்க் குர்மன் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிரபல ஆட்டர் பாக்ஸ் (OtterBox) நிறுவனத்தின் புதிய பாதுகாப்பு உறை பெஸ்ட் பை (Best Buy) கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த பேக் கேஸ் (Back Case) ஐபோன் 17 ப்ரோ மற்றும் புதிய ஐபோன் 18 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களுக்குமே கச்சிதமாகப் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போனின் நீளம், அகலம், தடிமன் மற்றும் பட்டன் அமைப்புகளில் ஆப்பிள் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது தெளிவாகிறது.
முன்பு வெளியான தகவல்களில் பெரிய பேட்டரி வருவதால் போன் தடிமனாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த கேஸ் தகவல் முந்தைய வதந்திகளைப் பொய்யாக்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: டிஸ்பிளேவே கிடையாது! Google-ன் புதுவிதமான Fitbit Air பேண்ட்!
iPhone 18 Pro Camera Setup
ஐபோன் 18 ப்ரோ கேமரா அமைப்புகள்: இந்த போனின் பின்புறத்தில் வழக்கமான மூன்று கேமராக்கள் கொண்ட செட்டப் மற்றும் எல்இடி ஃபிளாஷ், லிடார் சென்சார் (LiDAR Sensor) ஆகியவை கிடைமட்ட அமைப்பில் அப்படியே இடம்பெற்றுள்ளன.
புகைப்படங்களை அசுர தரத்தில் படம் பிடிக்க 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா (48MP Primary Camera), 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ் (48MP Ultra-wide Lens) மற்றும் 48 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கொடுக்கப்படவுள்ளது. வன்பொருளை விட கேமரா இமேஜ் ப்ராசஸிங் திறனில் ஆப்பிள் நிறுவனம் உண்மையிலேயே வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லலாம்.
இதையும் படியுங்கள்: 15000mAh பேட்டரியுடன் iQOO X Concept.. வேற லெவல் சிறப்பம்சங்கள்!
iPhone 18 Pro Processor and Battery
ஐபோன் 18 ப்ரோ பிராசஸர் மற்றும் பேட்டரி: முந்தைய மாடல்களை விட வேகத்தில் பட்டையைக் கிளப்ப அதிநவீன 2 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவான ஏ20 ப்ரோ சிப்செட் (2nm A20 Pro Chipset) இதில் பொருத்தப்பட்டுள்ளது.
நீண்ட நேர பயன்பாட்டிற்கு வசதியாக 4,056mAh திறன் கொண்ட பேட்டரி (4,056mAh Battery) வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதிவேக நெட்வொர்க் கனெக்டிவிட்டியை வழங்க கேனிமீட் என்ற குறியீட்டுப் பெயரில் உருவான புதிய சி2 மோடம் (C2 Modem) இதில் இணைக்கப்பட்டுள்ளது.
iPhone 18 Pro Launch Date
ஐபோன் 18 ப்ரோ வெளியீட்டு தேதி: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினமே ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் (Apple Foldable Smartphone) அறிமுகமாக உள்ளது. வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும் என்று யோசிக்கும் ஆப்பிள் பிரியர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். இது போன்ற சுடச்சுட புதிய டெக் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டெக் வாய்ஸ் தமிழ் (Tech Voice Tamil) தளத்துடன் இணைந்திருங்கள்.
