வெறும் ரூ.56,990-க்கு iPhone 17 Pro! ரிலையன்ஸ் டிஜிட்டல் மாஸ் ஆஃபர்!: ஆப்பிள் போன் பிரியர்களுக்குக் கொண்டாட்டமான செய்தி! பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள் வாயடைத்துப் போகும் வகையில், பிரபல எலக்ட்ரானிக்ஸ் விற்பனையகமான ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் மாடலான ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) ஸ்மார்ட்போனை வெறும் ரூ.56,990 என்ற தொடக்க விலையிலேயே வாங்கும் மாபெரும் சலுகை தற்போது கிடைக்கிறது.
சந்தையில் ரூ.1,34,900 என்ற ஆரம்ப விலையில் விற்கப்படும் இந்த பிரீமியம் போனை, ரூ.56,990 என்ற பட்ஜெட் விலைக்கு எப்படி வாங்குவது? இதில் என்னென்ன எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வங்கித் தள்ளுபடிகள் அடங்கியுள்ளன என்ற முழு விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: சீனாவுக்குள்ளேயே வெடித்த மோதல்! YMTC vs CXMT என்ன பண்றாங்க?
iPhone 17 Pro Reliance Digital Offer Breakdown
ஐபோன் 17 ப்ரோ ஆஃபர் கணக்கீடு: ரிலையன்ஸ் டிஜிட்டலில் 256GB மெமரி கொண்ட ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ போனின் அசல் விலை (MRP) ரூ.1,34,900 ஆகும். இதற்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் நேரடியாகவே ரூ.9,910 இன்-ஸ்டோர் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் போனின் விலை ரூ.1,24,990 ஆகக் குறைகிறது.
Your reason to go Pro just got bigger. 📱
— Reliance Digital (@RelianceDigital) September 23, 2026
Get the iPhone 17 Pro starting at an effective price of just ₹56,990* at Reliance Digital.
Unlock even more value with great exchange value, exchange bonus, bank cashback and flexible payment options.
Want to know your current phone’s… pic.twitter.com/K7zV16eu0E
இதையடுத்து, நீங்கள் பழைய ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது, அதற்குப் பழைய சாதன மதிப்பீடாக அதிகபட்சமாக ரூ.55,000 வரை கிடைக்கிறது. இதுதவிர, கூடுதலாக ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் தொகையும் வழங்கப்படுகிறது. கடைசியாக, குறிப்பிட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும்போது ரூ.3,000 உடனடி கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது.
இந்த அனைத்து தள்ளுபடிகளையும் (ரூ.9,910 ஸ்டோர் டிஸ்கவுண்ட் + ரூ.55,000 பழைய போன் மதிப்பு + ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் + ரூ.3,000 பேங்க் கேஷ்பேக்) கழித்த பிறகு, இந்த பிரம்மாண்டமான ஐபோன் 17 ப்ரோ 256GB போனை வெறும் ரூ.56,990 என்ற எஃபெக்டிவ் விலையிலேயே (Effective price) வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இதையும் படியுங்கள்: LPG சிலிண்டர் மானியம்: அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்!
iPhone 17 Pro Max Reliance Digital Offer
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை விவரங்கள்: பெரிய டிஸ்பிளே மற்றும் கூடுதல் பேட்டரி வசதி கொண்ட ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) 256GB மாடலின் அசல் விலை ரூ.1,49,900 ஆகும். இதற்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல் அதேபோல ரூ.9,910 நேரடி தள்ளுபடி வழங்குகிறது. இதனால் இதன் விலை ரூ.1,39,990 ஆக மாறுகிறது.
இதற்கும் பழைய ஐபோன் 15 ப்ரோ மாடலை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது ரூ.55,000 பழைய சாதன மதிப்பு, ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 வங்கி கேஷ்பேக் சலுகை முழுமையாகப் பொருந்தும். இவை அனைத்தையும் கழித்தால், டாப்-எண்ட் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் போனை வெறும் ரூ.71,990 என்ற நம்ப முடியாத விலையில் வாங்கிவிடலாம்.
ரிலையன்ஸ் டிஜிட்டல் அனைத்து கலர் வேரியண்ட்டுகளின் கிடைக்கும் தன்மையையும் (Assured availability of all colours), எளிய தவணை முறை மற்றும் பல்வேறு பேமெண்ட் ஆப்ஷன்களையும் வழங்குகிறது. பழைய போனை மாற்ற நினைக்கும் ஆப்பிள் பயனர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
