பிரபல பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட இந்த மாடலின் அசல் விலை ரூ.15,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.800 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த போனை வெறும் ரூ.15,199 என்ற மலிவான விலைக்கு வாங்கிவிட முடியும். இந்த பட்ஜெட் 5ஜி போனின் முழு சிறப்பம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
Lava Blaze Dragon 5G Specifications
லாவா பிளேஸ் டிராகன் 5ஜி அம்சங்கள்: வேகமான மற்றும் சீரான தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இதில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் சிப்செட் (Octa-Core Snapdragon 4 Gen 2 4nm Chipset) பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் செயலிகளைத் தடையின்றி இயக்குவதுடன் மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங் போன்ற பணிகளையும் சிறப்பாகச் செய்ய முடியும்.
மென்பொருளைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. இதனுடன் எதிர்கால ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் உறுதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு நவீனமாகவும் கைகளில் பிடிப்பதற்கு வசதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
Lava Blaze Dragon 5G Display
லாவா பிளேஸ் டிராகன் 5ஜி டிஸ்பிளே: காட்சிகளைத் தெளிவாகப் பார்க்க இதில் 6.74 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (6.74-inch HD+ LCD display) பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இது 1612 x 720 பிக்சல்கள் ரெசொலூஷன் மற்றும் தொடுதிரை உணர்வை மிக மென்மையாக்கும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) ஆதரவைக் கொண்டுள்ளது.
மேலும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (450 nits peak brightness), 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி ஆதரவுகளும் இதில் உள்ளன. இதன் மூலம் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளங்களை ஸ்க்ரோல் செய்யும்போது சிறந்த காட்சி அனுபவம் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: 51% அதிரடி தள்ளுபடி! 55 இன்ச் Acer QLED கூகுள் டிவி மாஸ் ஆஃபர்!
Lava Blaze Dragon 5G Camera & Battery
லாவா பிளேஸ் டிராகன் 5ஜி கேமரா மற்றும் பேட்டரி: தெளிவான படங்களை எடுக்கும் வகையில் இதன் பின்புறத்தில் 50 எம்பி மெயின் கேமரா (50MP main camera) உட்பட டூயல் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 8 எம்பி கேமரா உள்ளது. இதில் நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், பியூட்டி மோட் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுகளும் உள்ளன.
சார்ஜ் கவலையின்றி நீண்ட நேரம் பயன்படுத்த இதில் சக்திவாய்ந்த 5000mAh பேட்டரி (5000mAh battery) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (18W fast charging) வசதியும் உள்ளது. பெரிய 120Hz டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் 5ஜி வேகத்துடன் ஒரு சிறந்த இந்திய பிராண்ட் போனை ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி மிகச் சிறந்த தேர்வாகும்.

