இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் பயனர்கள் மத்தியில் அடுத்த 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி (Redmi Note 17 Pro Max 5G) ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை ரெட்மி இந்தியா நிறுவனம் எக்ஸ் தளத்தில் டீசர் வழியாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே குளோபல் மார்க்கெட்டில் (Global market) இந்த போன் வெளியாகிவிட்டதால், இதன் அம்சங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. பட்ஜெட் விலையில் அசுர பேட்டரி மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் வரவுள்ள இந்த போனின் முழு விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
Redmi Note 17 Pro Max 5G Specifications
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் அளவிலான 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே (1.5K AMOLED display) கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் நேரடி சூரிய வெளிச்சத்திலும் மிகத் தெளிவாகத் தெரியும் வகையில் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (3500 nits peak brightness) வசதி இடம்பெற்றுள்ளது.
மேலும் திரையில் கண் பாதுகாப்பிற்காக 3840Hz PWM டிம்மிங் மற்றும் டிசி டிம்மிங் (3840Hz PWM dimming and DC dimming) தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. டிசிஐ பி3 வைடு கலர் காமட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) வசதிகளுடன், ஈரான கைகளிலும் பயன்படுத்தும் வெட் டச் டெக்னாலஜி 2.0 மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) திரை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Redmi Note 17 Pro Max 5G Processor
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி பிராசஸர்: மிகச் சிறந்த செயல்பாட்டுக்காக ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 4என்எம் சிப்செட் (Snapdragon 6 Gen 5 4nm processor) இதில் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் நீடித்து உழைக்கும் உறுதித்தன்மைக்காக தூசு மற்றும் நீர் பாதிப்புகளில் இருந்து போனைப் பாதுகாக்கும் IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய பலத்த பாதுகாப்பு மதிப்பீடுகள் (Dust and water resistance ratings) இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: Samsung Galaxy A58: 3nm Exynos 1500 சிப்செட்.. புதிய லீக்!
Redmi Note 17 Pro Max 5G Camera
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி கேமரா: தரமான படங்களை எடுப்பதற்காக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் கேமரா (50MP OIS main camera) மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா இதில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 4K வீடியோ ரெக்கார்டிங், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நீருக்கடியில் படம் பிடிக்கும் அண்டர்வாட்டர் மோட் (Underwater Mode) மற்றும் அல்ட்ரா எச்டி மோட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. முன்பக்கத்தில் தெளிவான செல்ஃபிக்காக 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா (32MP selfie camera) இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: பட்டன் போன் பயனர்களுக்கு ஜாக்பாட்.. போன்பே அறிமுகம் செய்த UPI 123Pay புதிய சேவை!
Redmi Note 17 Pro Max 5G Battery
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி பேட்டரி: பல நாட்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் 10000mAh அசுர பேட்டரி (10000mAh battery) இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்ய 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (100W fast charging support) மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சார்ஜ் பகிர்ந்தளிக்க உதவும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெரிய பேட்டரி இருந்தபோதிலும் 8.57 மிமீ தடிமன் மற்றும் 223 கிராம் எடையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Redmi Note 17 Pro Max 5G Price
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 5ஜி விலை: குளோபல் மார்க்கெட்டில் இந்த போன் சுமார் ரூ.48,000 பட்ஜெட்டில் வெளியானது. ஆனால் இந்திய மார்க்கெட்டில் பயனர்களைக் கவரும் வகையில் கூடுதல் சலுகைகளுடன் இதைவிடக் கம்மியான விலையிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியீட்டுத் தேதி மற்றும் அதிகாரப்பூர்வ விலை விவரங்களை ரெட்மி இந்தியா நிறுவனம் மிக விரைவில் அறிவிக்க உள்ளது.

