Xiaomi 18 Pro: சியோமி நிறுவனத்தின் பிரீமியம் பிளாக்ஷிப் சீரிஸில் புதிய வரவாக சியோமி 18 ப்ரோ (Xiaomi 18 Pro) ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. இதனுடன் ரெட்மி நோட் 17 ஆரா (Redmi Note 17 Aura) மற்றும் சியோமி 18டி (Xiaomi 18T) ஆகிய மாடல்களும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன. இதனாலேயே இந்த Xiaomi 18 Pro ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், இந்திய விலை மற்றும் வெளியீட்டுத் தேதியைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
ஏற்கனவே சீன மார்கெட்டில் சியோமி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. இப்போது இந்திய மார்கெட்டில் பிரீமியம் பிளாக்ஷிப் (Premium Flagship) மாடலாக இது வர இருக்கிறது. பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தப் புதிய மாடல்களின் இந்திய வெளியீட்டுத் திட்டம் கசிந்துள்ளது.
அந்த வகையில் Xiaomi 18 Pro மற்றும் ரெட்மி நோட் 17 ஆரா ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் 2027 ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, ஜனவரி இரண்டாவது வாரத்தில் இந்தப் போன்களின் விற்பனை தொடங்க வாய்ப்புள்ளது. மேலும், சியோமி 18டி ஸ்மார்ட்போன் வரும் 2027 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்கவும்: புது போன் வாங்கப் போறீங்களா? சைலண்டாக இறங்கிய OPPO மாடல்!
சியோமி 18 ப்ரோ அம்சங்கள் (Xiaomi 18 Pro Specifications)
இப்போது, சீன வெர்ஷனில் கிடைத்த இந்த Xiaomi 18 Pro மாடலின் முழுமையான பீச்சர்களைப் பார்க்கலாம். இதில் அதிவேக ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 (Octa Core Snapdragon 8 Elite Gen 6) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 4 (HyperOS 4) இயங்குதளம் மற்றும் வேப்பர் சேம்பர் கூலிங் (Vapor Chamber Cooling) வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிஸ்பிளேவைப் பொறுத்தவரையில், 6.4 இன்ச் (1120 x 2436 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. இதற்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (4000 nits Peak Brightness) மற்றும் டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 (Dragon Crystal Glass 3) பாதுகாப்பு உள்ளது. இதுபோக, போனின் பின்புறத்தில் 2.7 இன்ச் (596 x 976 பிக்சல்கள்) கொண்ட 120Hz பேக் டிஸ்பிளே (Back Display) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 16 ஜிபி LPDDR5X ரேம் (LPDDR5X RAM) மற்றும் 1 டிபி UFS 4.1 ஸ்டோரேஜ் (UFS 4.1 Storage) வரை கிடைக்கிறது.
கேமராவைப் பொறுத்தவரையில், லைக்கா லென்ஸ் (Leica Lens) கொண்ட 200 எம்பி மெயின் கேமரா (OIS வசதியுடன்) + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (3.2x Optical Zoom) + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra-wide Camera) உள்ளது. செல்ஃபிக்காக 50 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியில் 7000mAh பேட்டரி, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (100W Wired Fast Charging), 50W வயர்லெஸ் சார்ஜிங் (50W Wireless Charging), 27W ரிவர்ஸ் சார்ஜிங் (27W Reverse Charging) மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது.
இதையும் படிக்கவும்: Jio சிம் வச்சிருக்கீங்களா? தினமும் 3GB டேட்டா தரும் 2 பிளான்கள்!
சியோமி 18 ப்ரோ விலை (Xiaomi 18 Pro Price in India)
விலையைப் பொறுத்தவரையில், இந்திய மார்கெட்டில் இந்த Xiaomi 18 Pro ஸ்மார்ட்போன் சுமார் ரூ.1,50,000 என்ற விலையில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் சீன மார்கெட்டில் அறிமுகமானபோது, இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் அடிப்படை வேரியண்ட் 5,999 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.86,000) விலையில் வெளியானது.
இருப்பினும், ரெட்மி நோட் 17 ஆரா மற்றும் சியோமி 18டி ஆகிய மாடல்களின் விலை மற்றும் முழு ஸ்பெசிபிகேஷன் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல, சியோமி நிறுவனத்திடம் இருந்து இந்த மூன்று மாடல்களின் இந்திய வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
ஆகவே, இந்த வெளியீட்டுத் தேதி மற்றும் விலை விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ஒரு எதிர்பார்ப்பாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு வாரங்களில் இந்தியாவில் Xiaomi 18 Pro மற்றும் ரெட்மி நோட் 17 ஆரா வெளியாவது குறித்த கூடுதல் தகவல்களைச் சியோமி இந்தியா வெளியிட வாய்ப்புள்ளது.


