லோன் எடுத்தவங்களுக்கு ஒரு செம நியூஸ்! வட்டி விகிதத்தை குறைக்கும் RBI-ன் புதிய 2026 ரூல்ஸ்!

வட்டி விகிதத்தை குறைக்கும், முன்கூட்டியே லோன் முடித்தால் பெனால்டி இல்லை மற்றும் சிபில் ஸ்கோர் மூலம் வட்டியை குறைக்கும் RBI-ன் 5 புதிய ரூல்ஸ்.

rbi new rules 2026 multiple nominees credit score updates lower interest rates no penalty for loan closure in tamil, லோன் எடுத்தவங்களுக்கு ஒரு செம நியூஸ்! வட்டி விகிதத்தை குறைக்கும் RBI-ன் புதிய 2026 ரூல்ஸ்!

RBI New Rules 2026 லோன் எடுத்தவங்களுக்கு ஒரு செம நியூஸ்! வட்டி விகிதத்தை குறைக்கும் RBI-ன் புதிய 2026 ரூல்ஸ்!: இந்தியாவில் உள்ள வங்கிகளை நிர்வகித்து வரும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India), பொதுமக்களின் வங்கி அனுபவத்தை எளிதாக்கும் வகையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

வட்டி விகிதத்தை குறைக்கும் RBI-ன் புதிய 2026 ரூல்ஸ்!

குறிப்பாக வங்கி கணக்கு துவங்குபவர்கள் மற்றும் லோன் எடுப்பவர்களுக்கு (Bank account and loan rules) மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான புதிய ரூல்ஸ்களை (RBI new rules 2026) ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது. மற்ற வங்கிகளை வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும் அளவிற்கு இந்த 5 மாஸான அப்டேட்கள் வெளிவந்துள்ளன.

Multiple Nominees

நான்கு நாமினிகள் வரை சேர்க்கலாம்: (Multiple nominees rule) இதுவரை ஒரு வங்கி கணக்கு அல்லது பிக்சட் டெபாசிட் (Fixed deposit schemes) தொடங்கினால் அதில் ஒருவரை மட்டுமே நாமினியாக (Nominee addition) சேர்க்க முடியும். ஆனால் புதிய விதியின் படி, இனி நீங்கள் 4 பேர் வரை நாமினியாக சேர்க்க முடியும்.

குடும்பத்தில் ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அந்த பணத்தை யாருக்கு கொடுப்பது என்ற குழப்பத்தைத் தவிர்க்க, சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கும் வகையில் இந்த அட்டகாசமான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடி உஷார்: 👉 UPI பயனர்களுக்கு செம ஷாக்! இனி ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்பினால் 1 மணி நேரம் தாமதம்!

Weekly Credit Score Update

வாராந்திர கிரெடிட் ஸ்கோர் அப்டேட்: (Weekly credit score updates) லோன் எடுப்பதற்கு சிபில் ஸ்கோர் (CIBIL score) மிகவும் அவசியமாகும். இதுவரை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே அப்டேட் செய்யப்பட்ட கிரெடிட் ஸ்கோர்கள், இனி வாராவாரம் அதாவது 7 நாட்களுக்கு ஒருமுறை (Every 7 days update) அப்டேட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களின் இஎம்ஐ-களை (EMI payments) சரியாக கட்டினால் உங்கள் சிபில் ஸ்கோர் வேகமாக உயரும்.

Zero Penalty for Loan Pre-closure

முன்கூட்டியே லோன் முடித்தால் பெனால்டி இல்லை: (Zero loan penalty) முன்பு லோனை முன்கூட்டியே முடித்தால் வங்கிகள் குறிப்பிட்ட சதவீதத்தை பெனால்டியாக (Pre-closure penalty) வசூலிக்கும். ஆனால் இப்போது எஜுகேஷன், ஹோம், பர்சனல் லோன் (Home and personal loans) போன்ற லோன்களை முன்கூட்டியே முடித்தால் எந்தவித பெனால்டியும் கட்டத் தேவையில்லை (No penalty) என்ற புதிய விதியை ஆர்பிஐ கொண்டுவந்துள்ளது.

தமிழக தேர்தல் அப்டேட்: 👉 ஓட்டுப் போட வாக்காளர் அட்டை இல்லையா? கவலையை விடுங்க.. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு!

rbi new rules 2026 multiple nominees credit score updates lower interest rates no penalty for loan closure in tamil

Lower Interest Rates

வட்டி விகிதத்தை குறைக்கும் வசதி: (Lower interest rates) இது வாங்குனா இப்படி ஒரு வசதியை வாங்கனும் என்று சொல்ல வைக்கும் ஒரு அப்டேட் ஆகும். நீங்கள் லோன் எடுக்கும்போது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்து அதிக வட்டி (High interest rates) கட்டியிருந்தால், இப்போது உங்கள் சிபில் ஸ்கோர் அதிகரித்திருந்தால் நீங்கள் நேரடியாக வங்கிக்குச் சென்று வட்டியை குறைக்குமாறு (Negotiate interest rates) கேட்க முடியும்.

ஒருவேளை அந்த வங்கி மறுத்தால், வேறு வங்கியின் குறைந்த வட்டி ஆஃபரைக் (Competitor bank offers) காட்டி உங்கள் தற்போதைய வங்கியிலேயே வட்டியை குறைத்துக் கொள்ள முடியும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை செக் செய்ய: 👉 அதிகாரப்பூர்வ CIBIL இணையதளம்

Gold Loan Extension

கோல்டு லோன் காலநீட்டிப்பு: (Gold loan extension) நகை வியாபாரம் செய்பவர்கள் (Gold retailers) வாங்கும் GML (Gold Metal Loan) கடனுக்கான திருப்பிச் செலுத்தும் காலம் முன்பு 180 நாட்களாக இருந்தது. தற்போது இது 270 நாட்களாக அதாவது 9 மாதங்களாக (Extended to 9 months) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் குறு நகை வியாபாரிகள் பெரியளவில் பயன்பெறுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு: 👉 ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்


About the author

Sakthi
ஆசிரியர் (Chief Editor) ​'Tech Voice Tamil' இணையதளத்தின் நிறுவனரும், தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் கணினி மென்பொருட்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறார். புதிய கேட்…

கருத்துரையிடுக