மியூசிக் மற்றும் கேமிங் பிரியர்களின் பேவரைட் பிராண்டான ரியல்மி (Realme), தற்போது சந்தையில் தங்களின் புதிய ஆடியோ கேட்ஜெட்டான 'ரியல்மி பட்ஸ் டி500 ப்ரோ' (Realme Buds T500 Pro) இயர்பட்ஸை களமிறக்கியுள்ளது. பார்ப்பதற்கு ஒரு சிறிய சாக்லேட் கேண்டி போல (Candy-sized box) மிகவும் கியூட்டாக இருந்தாலும், இதில் வெளிவரும் சவுண்ட் குவாலிட்டி ஆட்டையை கலைக்கும் ரகமாக உள்ளது. சிறந்த பேஸ் மற்றும் சக்திவாய்ந்த ஆடியோவுடன் வந்துள்ள இந்த புதிய இயர்பட்ஸ் உண்மையிலேயே வாங்குவதற்கு தகுதியானதா? இதன் முழுமையான ரிவியூ தகவல்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
Realme Buds T500 Pro Design and comfort
வடிவமைப்பு மற்றும் வசதி (Design and comfort): இந்த இயர்பட்ஸ் சிறிய 'கேண்டி பாக்ஸ்' போன்ற கச்சிதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக லெமன் கோலா (Lemon Cola) நிற மாடல் லெதர் டெக்ஸ்ச்சர் உடன் கைகளில் பிடிக்க மிகவும் பிரீமியமாக உள்ளது. ஒவ்வொரு இயர்பட்டும் வெறும் 4.4 கிராம் எடை மட்டுமே உள்ளதால், காதுகளில் நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் எந்த வலியும் தெரியவில்லை. மேலும் இது வியர்வை மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் IP55 ரேட்டிங் உடன் வருகிறது.
Realme Buds T500 Pro Audio Performance
ஆடியோ மற்றும் சவுண்ட் குவாலிட்டி (Audio Performance): இதில் 12.4mm ஆடியோ டிரைவர்கள், Hi-Res ஆடியோ மற்றும் LHDC ஆடியோ கோடெக் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களை கேட்கும் போது பேஸ் (Bass) சற்று தூக்கலாகவே தெரிகிறது, இது மியூசிக் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். மேலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்பேஷியல் ஆடியோ (Spatial audio) தொழில்நுட்பம், சினிமா மற்றும் வெப் சீரிஸ் பார்க்கும் போது பிரம்மாண்டமான தியேட்டர் அனுபவத்தைத் தருகிறது.
மேலும் படிக்க: 👉 ஜிமெயிலில் வரும் தேவையற்ற ஸ்பேம் மெயில்களை கூண்டோடு அழிப்பது எப்படி?
Calling and noise-cancellation
அழைப்புகள் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் (Calling and noise-cancellation): இதில் 50dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி உள்ளது. ஏசி சத்தம் மற்றும் டிராபிக் இரைச்சல்களை இது கணிசமாகக் குறைக்கிறது. மேலும், இதில் உள்ள அடாப்டிவ் ANC மற்றும் டிரான்ஸ்பரன்சி மோட் (Transparency mode) ஆகியவையும் அருமையாக வேலை செய்கின்றன. போன் பேசுவதற்காக இதில் மொத்தம் 6 மைக்குகள் (six microphones) கொடுக்கப்பட்டுள்ளன, இதனால் எவ்வளவு சத்தமான இடத்திலும் உங்கள் குரல் தெளிவாகக் கேட்கிறது.
Features and connectivity
சிறப்பம்சங்கள் மற்றும் கனெக்டிவிட்டி (Features and connectivity): லேட்டஸ்ட் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) சப்போர்ட் இதில் உள்ளது. ஒரே நேரத்தில் லேப்டாப் மற்றும் மொபைல் என இரண்டு சாதனங்களில் கனெக்ட் செய்யும் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Realme Link ஆப் மூலம் இதன் கஸ்டம் EQ மற்றும் செட்டிங்ஸ்களை மாற்றிக்கொள்ளலாம். மேலும், AI Face to Face translation, இயர்பட்ஸை கழற்றினால் பாடல் நிற்கும் Wear detection மற்றும் இயர்பட்ஸ் தொலைந்தால் கண்டுபிடிக்க உதவும் Find My Earbuds போன்ற பல மாஸான வசதிகள் இதில் அடங்கியுள்ளன.
மேலும் படிக்க: இன்ஸ்டாகிராமில் வியூஸ் குறைகிறதா? ஸ்பேம் ஃபாலோயர்களை கூண்டோடு அழிப்பது எப்படி?
Realme Buds T500 Pro Battery Life
பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery Life): ANC மற்றும் LHDC கோடெக் ஆஃப் செய்யப்பட்ட நிலையில், இயர்பட்ஸ் மட்டும் 7.5 மணி நேரம் வரை பேக்கப் தருகிறது. சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 38 மணி நேர பிளேபேக் கிடைக்கும் என்பது உறுதியாகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் மூலம், வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் சில மணி நேரங்கள் தொடர்ந்து பாடல்களைக் கேட்கும் வசதியும் இதில் உள்ளது.
Verdict
இறுதி முடிவு (Verdict): வெறும் ரூ.2,799 விலையில் அறிமுகமாகியுள்ள இந்த Realme Buds T500 Pro வாங்குவதற்கு மிகவும் தகுதியான ஒரு ஆல்-ரவுண்டர் கேட்ஜெட் ஆகும். தினசரி பயன்பாட்டிற்கு இசை, கால்கள், சினிமா மற்றும் கேமிங் என அனைத்திற்கும் ஒரு பக்கா டிவைஸாக இது செயல்படுகிறது.


